அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் புதிய உச்ச தலைவர்..!

மறைந்த தனது தந்தை அயதுல்லா அலி காமேனிக்கு மட்டுமல்லாமல், போரில் உயிரிழந்த ஒவ்வொரு குடிமகனுக்காகவும் பழிவாங்குவோம் என்று ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி தெரிவித்துள்ளார்.

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். இதில், அமெரிக்காவிற்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்க ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும், வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல் தொடரும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, அமெரிக்க ராணுவத் தளங்கள் வளைகுடா நாடுகளிலிருந்து தொடர்ந்து செயல்பட்டால் அவை தாக்கப்படும் என்று கூறினார்.

இதையடுத்து, ஈரான் ஒருபோதும் பின்வாங்காது எனவும், முழு பலத்துடன் எதிர்க்கும் எனவும் தெரிவித்தார். பின்னர், மறைந்த தனது தந்தை அயதுல்லா அலி காமேனிக்கு மட்டுமல்லாமல், போரில் உயிரிழந்த ஒவ்வொரு குடிமகனுக்காகவும் பழிவாங்குவோம் என்று கூறினார். மேலும், தனது தந்தையின் பாதையிலேயே தொடர்வேன். தியாகிகளின் இரத்தத்திற்குப் பழிவாங்கியே தீருவோம் என்று தெரிவித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *