பிரதமர் மோடி அதிரடி முழக்கம்..!

Advertisements

உலகளாவிய நெருக்கடியையும் நாம் சமாளிப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய காரணமாக இருப்பது என்பது சவால்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் என்று தெரிவித்தார். பின்னர், கோவிட்-19 என்ற பெருந்தொற்றைக் கண்டோம், பின்னர் ரஷ்யா – உக்ரைன் போர் நெருக்கடி, இப்போது மற்றொரு பெரிய போர் என்று கூறினார்.
ஆனால், இந்தப் போர் ஒட்டுமொத்த உலகத்தையும் பெரும் எரிசக்தி நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. இத்தகைய கடினமான சூழ்நிலைகளில், நாம் எவ்வாறு சமாளிக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று தெரிவித்தார். இதையடுத்து, சிலர் எல்பிஜி எரிவாயு பற்றி நிறைய வதந்திகளை உருவாக்குகின்றனர். ஆனால், அவ்வாறு செய்வதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் அவர்கள் தீங்கு விளைவிக்கிறார்கள் என்று கூறினார்.
மேலும், தனது மக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் கோவிட்- 19 என்ற பெருந்தொற்றை ஒன்றிணைந்து வெளியேற்றியதுபோல, இந்த உலகளாவிய நெருக்கடியையும் நாம் சமாளிப்போம் என்று தெரிவித்தார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *