
கர்நாடகா : கர்நாடகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அங்கோலா தாலுகாவுக்கு உட்பட்ட ஷிரூர் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலை 66-ல் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில், 7 பேர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தகவலறிந்து வந்த மீட்பு பணியினர், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், 4 பேர் உடல் சடலமாக மீட்கப்பட்டது. மேலும் 3 பேரின் உடலை மீட்பு பணியினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். நிலச்சரிவை தொடர்ந்து, அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




