
மேற்கு வங்கச் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் கோர்க்கா மக்களின் சிக்கல்களைத் தீர்க்க ஆறே மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலையொட்டி டார்ஜிலிங்கில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
அப்போது, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் இரண்டுமே டார்ஜிலிங்களில் உள்ள கோர்க்கா இன மக்களுக்கு அநீதி இழைத்துவிட்டதாகக் கூறினார். பாஜக ஆட்சியமைந்த ஆறு மாதத்துக்குள் கோர்க்காக்களின் சிக்கல்கள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.
மம்தா ஆட்சியில் சந்தேஷ்காளி உள்ளிட்ட ஏராளமான அட்டூழியங்களில் எண்ணற்ற பெண்கள் பாதிக்கப்பட்டதாகவும், இது வங்கத்துக்கு அவமானம் என்றும் தெரிவித்தார். இந்தக் குற்றங்களில் தொடர்புடைய ஒவ்வொருவரும் சிறையில் அடைக்கப்படுவர் என்று கூறினார்.
வங்கத்தின் மலைப்பகுதிகளுக்கும் பழங்குடியினருக்கும் இரண்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிய திரிணாமூல் அரசு, முஸ்லிம்களுக்கும் மதரசாக்களுக்கும் 5800 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், இந்த அநீதி நீடிக்காது என்றும் குறிப்பிட்டார்..


