
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவுச் சுற்றுப் பயணத்தை முடித்ததுடன் இரண்டு நாள் பயணமாகத் தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் 381 கோடி ரூபாயில் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். மேலும் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார். பின்னர் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடிதிருவாதிரை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தைப் பிரதமர் மோடி வெளியிடவுள்ளார். மேலும் அவரது வருகை முன்னிட்டு இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.



