ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெருப்புடன் விளையாடாதீர்கள் என ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில்  நடைபெற உள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலிருந்து பல லட்சம் வாக்காளர்களை நீக்கப்படுவதாகத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது சீர்திருத்தம் அல்ல தேர்தல் முடிவுகளைத் திட்டமிட்டபடி வடிவமைக்கும் தில்லுமுல்லு நடவடிக்கையாகும் நெருப்புடன் விளையாடாதீர்கள் என ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முழு ஆற்றலுடன் தமிழ்நாடு தனது குரலை உரக்க எழுப்பும். மேலும் எஸ்.ஐ.ஆர். என்பது ஒரு மாநிலத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல நமது குடியரசின் அடித்தளம் தொடர்பானது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *