காசாவில் நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21 பேர் பலியாகிவுள்ளனர். காசாவில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 59 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர்.
பின்னர் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். மேலும் காசாவில் நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 21 பேர் பலியாகி உள்ளனர்.
இதில், வடமேற்கு காசாவில் நடந்த தாக்குதலில், கர்ப்பிணி உள்பட 6 பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்தனர். மேலும் நாசர் பகுதியில் இருந்த கூடாரத்தின் மீது நடந்த 3-வது தாக்குதலில் குழந்தைகள் 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பஞ்சம் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. இதனால் 100-க்கும் மேற்பட்ட மனித உரிமை குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், காசாவுக்கு கூடுதல் உதவி தரப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அதுபற்றிய கடிதம் ஒன்றும் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.



