வங்கக்கடலில் சூறாவளி புயலாக வலுப்பெறும்- வானிலை!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 3 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது நாகப்பட்டினத்திற்கு கிழக்கே, புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்கே 320 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

சென்னைக்கு தென்கிழக்கே 340 கி.மீ  தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தம் நிலைக்கொண்டுள்ளது.

இது அடுத்த 3 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளைப் பிற்பகலில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது, மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *