ரெபோ வட்டி விகிதம் மாற்றமின்றி ஐந்தரை விழுக்காடாக இருக்கும்..

இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி ஐந்தரை விழுக்காடாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கித் தலைமையகத்தில் அதன் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி ஐந்தரை விழுக்காடாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இதேபோல் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்பு கணித்தது போல ஆறரை விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *