
மதுரையில் ஆகஸ்டு 25ஆம் நாள் நடைபெறுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு, ஆகஸ்டு 21ஆம் நாள் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்டு 25ஆம் தேதி மாநாடு நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவித்த நிலையில் அதையொட்டி விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் ஆகஸ்டு 18 முதல் 22 வரை ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்தும்படி காவல்துறை கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
அதை ஏற்றுக்கொண்டு ஆகஸ்டு 21ஆம் தேதி மாலை 4 மணியளவில் மதுரையில் மாநாடு நடத்தப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார். மாநாட்டக்குப் பொறுப்புடனும் பாதுகாப்புடனும் வந்து கலந்துகொள்ளுபடி தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

