Advertisements

சிவகங்கை அருகே வேனும் சரக்கு வாகனமும் மோதியதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சாமி தரிசனம் செய்ய வேனில் இருபதுக்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர். வேனைச் சுந்தரமூர்த்தி ஓட்டி வந்தார். அவர்கள் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் தரிசனம் செய்துவிட்டுத் தஞ்சாவூர் – மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.
சிவகங்கையில் மேலூர் செல்லும் சந்திப்பு சாலையில், ஆரோக்கியதாஸ் ஓட்டி வந்த சரக்கு வாகனமும் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வேனில் இருந்த பத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களைக் காவல்துறையினர் உடனடியாக மீட்டுச் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக சிவகங்கை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisements



