கார்த்தியின் ‘சர்தார் 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு – அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

நடிகர் கார்த்தி  நடிப்பில் சர்தார் 2 திரைப்படம்  வருகிற செப்டம்பர் 10 ஆம்  தேதி வெளியாக உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு  அதிகரித்துள்ளது.

இயக்குநர் மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு சர்தார் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சர்தார் 2’ திரைப்படத்தில் கார்த்தி, அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சாம் இசையமைத்துள்ளார்.  ‘சர்தார் 2’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *