
மோதலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக்கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி, திமுக ஆட்சியில் யாரும் வாழவே முடியாதா? என்று வினவியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், தனியார் தோட்டத்தில் மோதலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கச் சென்ற குடிமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிப் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பணியில் இருக்கும் காவல் அதிகாரியைக் கொடூரமான முறையில் கொல்லும் அளவுக்குக் குற்றவாளிகளுக்குத் துணிச்சல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் யாருமே அச்சமின்றி வாழ முடியாது என்ற நிலை நிலவுவதையே இந்தக் கொலை காட்டுவதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.



