பூலித்தேவன் 311-வது பிறந்தநாள் – முதலமைச்சர் விஜய் புகழாரம்!

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடிய மாவீரன் பூலித்தேவனின் வீரமும், தாய்மண் மீதான பற்றும் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாதவை என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், நெற்கட்டும்செவல் பாளையக்காரருமான மாவீரன் பூலித்தேவனின் 311-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் விஜய் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தமிழக மண்ணில், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பே துணிச்சலுடன் களம் கண்ட விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடிமைத்தனத்தை ஏற்க மறுத்து, அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை அஞ்சாமல் போராடிய பூலித்தேவனின் வீரமும், தாய்மண் மீதான பற்றும், சுயமரியாதை உணர்வும் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும், தாய்நாட்டு விடுதலைக்காகத் தன்னலமின்றிப் போராடிய மாவீரன் பூலித்தேவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *