வாங்சுக் கைதுக்கு எதிரான மனு – உச்சநீதி மன்றம் நோட்டீஸ்..!

Advertisements

பருவநிலைச் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக்கைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளதை எதிர்த்து அவர் மனைவி தாக்கல் செய்துள்ள மனுவுக்குப் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒன்றிய ஆட்சிப் பகுதியான லடாக்கில், மாநிலத் தகுதி வழங்கக் கோரிப் பருவநிலைச் செயல்பாட்டாளரான சோனம் வாங்சுக் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்துப் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சோனம் வாங்சுக்கைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர் அவரை இராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர்.

இதையடுத்து லடாக்கில் வன்முறை மேலும் பரவாமல் இருக்க அங்குச் சமூக வலைத்தளங்களுக்கும், செல்பேசி இணைய வசதிக்கும் தலை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சோனம் வாங்சுக்கைக் கைது செய்ததை எதிர்த்தும், அவரை விடுவிக்கக் கோரியும் அவர் மனைவி கீதாஞ்சலி அங்மோ தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அந்த மனுவுக்குப் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதேபோல லடாக் ஒன்றிய ஆட்சிப்பகுதியின் நிர்வாகத்துக்கும், ஜோத்பூர் மத்தியச் சிறைக் கண்காணிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்துக் கீதாஞ்சலி அங்மோ செய்தியாளர்களிடம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தன் கணவர் சோனம் வாங்சுக் தேசியப் பாதுகாப்புக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தலாக இருக்கவில்லை எனத் தெரிவித்தார்.

அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்ததற்கான காரணத்தையும் தனக்குத் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *