அதிமுகவுக்கு வேலை செய்ய மாட்டோம் : எடப்பாடி பேச்சால் விபரீதம்.!

வருகிற தேர்தலில் அதிமுகவுக்காக வேலை செய்ய மாட்டோம் என பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் போர்க்கொடி பிடித்திருக்கிறார்கள் . தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பணியாற்றுவதற்கு பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நியமித்து உள்ளார் .
தற்பொழுது தமிழக பாரதியா ஜனதா கட்சி உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வருகிறது . இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் இடங்களில் எல்லாம் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் அதே சமயம் கூட்டணி ஆட்சி தான் நடக்கும் என்று பேசி வருகிறார்
அதாவது அதிமுக தான் தலைமை என்றாலும் ஆட்சி தனித்த ஆட்சி அல்ல அதிமுக பாஜகவின் கூட்டாட்சி தான் என்று அவர் பேசி வருகிறார் .ஒரு சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற நெல்லை பூத்கமிட்டி கூட்டத்தில் கூட அவர் இதையேதான் பேசினார் .
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா எப்போதெல்லாம் கூட்டணி ஆட்சி என்று சொல்லி வருகிறாரோ அப்பொழுதெல்லாம் அதிமுக தான் தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்து வருகிறார். இது மட்டுமில்லாமல் ஒரு கட்டத்தில் அதிமுக என்ன ஏமாளியா? கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தி தருவதற்கு என் ஆவேசமாகவுமீ பேசினார் .
ஆட்சியில் எங்களுக்கு பங்கு தராவிட்டால் நாங்கள் எதற்காக அதிமுகவுக்கு வேலை செய்ய வேண்டும். வெறுமனே கூட்டணி அமைத்து உங்களை மட்டும் ஆட்சியில் வைப்பதற்கு நாங்கள் என்ன ஏமாளிர்களா? எனவே தேர்தலில் நாங்கள் அதிமுகவுக்காக வேலை செய்ய மாட்டோம் என்று போர் கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *