Hydrocarbon Project : வரும் 29-ஆம் தேதி கடலூரில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.!

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் 29-ஆம் தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை கடற்கரையில், 18 கிலோ மீட்டர் தொலைவில், 4 புதிய கடல்சார் ஹைட்ரோ-கார்பன் கிணறுகள் அமைத்து, கச்சா எண்ணெய் எடுப்பதற்காக, இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் நிறுவனம், தமிழ் நாடு அரசு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற எனது தலைமையிலான கழக ஆட்சியில், கடலூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது, கடலில் ஹைட்ரோ-கார்பன் கிணறுகள்; அமைக்க இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.

இந்நிலையில், பரங்கிப்பேட்டை கடற்கரையில், இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் நிறுவனம், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்கு த.வெ.க. அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும்;, கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் சேரவைத்து, குதிரைபேர ஆட்சி நடத்தி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க. சார்பில், 29-ஆம் தேதி காலை 10 மணியளவில், பரங்கிப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *