தமிழகத்தில் தி.மு.க.,வை அடியுடன் அழிக்க வேண்டும் – அண்ணாமலை

பாஜகவின் முதன்மை எதிரி திமுக தான் என்றும், தமிழகத்தில் தி.மு.கவை வீழ்த்த வேண்டும் என்பதே தங்கள் இலக்கு என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள நிறுவனத்தில் இருந்த அனுப்பப்பட்ட மருந்தால் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்கும்போது நீதிபதியாக இருந்தால் கூடக் கருத்துகளைச் சொல்வது ஏற்புடையது அல்ல என்று அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று திமுக தொடர்ந்து கூறி வரும் நிலையில், யாரை எதிர்த்துப் போராடும் என்று ஆளுநர் கேள்வி கேட்பது சரி தான் என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *