தவெக ஆட்சியாளர்களைக் கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின்..!

Advertisements

தூத்துக்குடியில் மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் குடும்பத்திற்கு, திரைப்படத்தை பார்த்து கண்ணீர் வடிக்கும் த.வெ.க. ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்ட விரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்திருப்பது வேதனை அளிக்கிறது என்றும். காவலர்களால் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும்போது நெஞ்சம் கலங்குகிறது என்றும், காவல் மரணங்களின் போது, துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது எனவும், மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்திற்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள் என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி-ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *