மோடியுடன் எடப்பாடி , அன்புமணி, பிரேமலதா , டிடிவி , ஓபிஎஸ்.!

Advertisements
பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி,  தேமுதிக செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் , அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் , அதிமுக ஒருங்கிணைப்பு கழக தலைவர் ஓ பன்னீர்செல்வம்,  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் , ஆகியோர் கைகோர்த்தபடி அதிமுக புதிய கூட்டணி வருகிற ஜனவரி மாதம் அறிவிப்பதற்கான பரபரப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன .
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே இருக்கிறது இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மிகப்பெரிய கூட்டணியை ஏற்படுத்தும் விதமாக அதிரடி திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன தற்பொழுது பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் அதிமுக தமிழ் மாநில காங்கிரஸ் புதிய நீதி கட்சி இந்திய ஜனநாயக மக்கள் கட்சி ஆகியவை இருக்கின்றன. ஆனால் தேர்தல் வெற்றிக்கு இந்த கூட்டணி போதாது மேலும் பலமான கூட்டணி அமைய வேண்டும் என்பது பாரதிய ஜனதா கட்சியின் திட்டமாக இருக்கிறது .
இந்த நிலையில்,  பிரதமர் மோடி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தமிழகம் வருகிறார். அன்றைய தினம் யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக மெகா கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியாவதுடன் அனைத்து கூட்டணி தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன .
முன்னதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தமிழக தேர்தல் நிலவரம் சரியாக புரியவில்லை என்ற காரணத்தால் அவருக்கு பதிலாக தற்பொழுது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் . இவர் ஏற்கனவே அதிமுகவுடன் நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில்,  சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசிய நைனார் நாகேந்திரன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்திய நிலையில்,  அது பற்றிய தகவல் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக வருகிற 23ஆம் தேதி மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வருகிறார் .
முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் சி.வி சண்முகம் , தனபால் மற்றும் நைனார் நாகேந்திரன் சார்பில் தமிழக பாஜக துணை தலைவர் கோபால்சாமி ஆகியோர் டெல்லி சென்றனர் . அவர்கள் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினர் . அப்பொழுது பல திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் தொடங்கிய தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற மக்கள் சந்திப்பு நிறைவு விழா பொதுக்கூட்டத்தை வருகிற ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி நடத்தவும் அதில் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை பங்கேற்க வைக்கும் திட்டமிடப்பட்டது . தற்பொழுது அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. பொங்கல் விழாவை ஊட்டி மதுரை அல்லது தஞ்சாவூர் மாவட்டத்தில் அந்த விழா நடத்த திட்டமிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன .
அனேகமாக மதுரையில் பாஜக சார்பில் பொங்கல் விழா கூட்டம் நடைபெறும் என தெரிகிறது.  அதே சமயத்தில் நாடாளுமன்ற கூட்டம் காரணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருவதும் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது இதனை தொடர்ந்து இந்த மாத இறுதியில் அவர் தமிழகம் வருகிறார் . இதன் பின்னர் பிரதமர் மோடி பங்கேற்கும் பொங்கல் விழா மற்றும் பொதுக்கூட்ட தேதி விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இதற்கிடையே பிரதமர் மோடி பங்கேற்கும் விழா மேடையில் அவருடன் எடப்பாடி பழனிச்சாமி.  அன்புமணி.  டிடிவி தினகரன், பன்னீர்செல்வம்,  பிரேமலதா விஜயகாந்த் , ஜிகே வாசன் ஆகியோரை பங்கேற்க வைத்து புதிய கூட்டணி பற்றி அறிவிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன .
டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் போன்றோர். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.  இந்த நிலையில் அவர்கள் இருவரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்பொழுது அவர்களுடன் பாஜக சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனவே தமிழக வெற்றி கழகத்தில் இணைவது தொடர்பான நடவடிக்கைகளை டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தற்போது தள்ளி வைத்திருப்பதாக தெரிகிறது .
இவர்கள் அதிமுக அல்லாது பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேருவதற்கான ஏற்பாடுகள் நெருங்கி விட்டதாக சொல்கிறார்கள் .இதற்கிடையே தமிழக வெற்றி கழகம் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி உடன் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என நிர்மலா சீதாராமன் ஒரு தகவலை தெரிவித்து இருக்கிறார். அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை . எனவே தான் நடிகர் விஜய் குறித்து அதிமுக மற்றும் பாஜக தரப்பில் எதிர்ப்பு குரல் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள் .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *