24-ல் மதுரையில் சசிகலா புதிய கட்சி: அமமுக இரண்டாக உடைகிறது.! 

Advertisements
தமிழக அரசியல் தலைவர்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவும் ஒரு முக்கிய நபராக பார்க்கப்படுகிறார் . கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என அறிவித்த சசிகலா தற்போது திரை மறைவில் இருந்தபடி பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார் .
இறுதி கட்டமாக வருகிற 24ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமான மாநாடு ஒன்று நடைபெறுகிறது . சசிகலா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் புதிய கட்சியை அறிவிக்கிறார்.  அது மட்டுமல்லாமல் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் சசிகலாவுடன் இணைகிறார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற அண்ணா நினைவுநாள் விழாவில் பத்திரிகையாளர்களை சசிகலா சந்தித்தபோது தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர் . அப்பொழுது நிச்சயமாக எனது ஆதரவாளர்கள் தேர்தல் களத்தில் இறங்குவார்கள் என சசிகலா பதில் தெரிவித்தார் .
இதன் பின்னணியில் அவர் புதிய கட்சி ஒன்றை தொடங்கப் போவதாகவும் தமிழக வெற்றிக்கழகத்துடன் இணைய போவதாகவும் தகவல்கள் வெளியாகின.  புதிய கட்சி தொடங்குவது குறித்து சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.  அவர்கள் ஆலோசனையின் படி புதிய கட்சி தொடங்குவது என சசிகலா இறுதி முடிவு எடுத்திருக்கிறார் .
வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வருகிறது அன்றைய தினம் மதுரை அல்லது ராமநாதபுரத்தில் மாநாடு ஒன்றை நடத்தலாம் என சசிகலா முடிவு செய்து இருக்கிறார். அனேகமாக மதுரையில் அவர் பிரம்மாண்ட மாநாடு ஒன்று நடத்தலாம் என தெரிகிறது அன்றைய தினம் தனது புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிடுகிறார் .
இதற்கான ஏற்பாடுகளை அவரது சகோதரர் திவாகரன் செய்து வருகிறார் மேலும் சசிகலாவின் கணவர் நடராஜனின் உறவினர் சிலரும் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் . முன்னதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து ஏராளமான நிர்வாகிகளை தன் பக்கம்  இழுப்பதற்கான திரை மறைவு வேலைகளை செய்திருக்கிறார் .
பெங்களூரில் சிறை தண்டனை அனுபவித்த காலத்தில் இருந்து டிடிவி தினகரனுக்கும் சசிகலாவுக்கும் பணிப்போர் நடைபெற்று வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு செலவு செய்யும் வகையில் சசிகலாவிடமிருந்து ஏராளமான பணத்தை பெற்றுக் கொண்டு டிடிவி தினகரன் ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது .
அதேசமயம் , கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் படி சசிகலாவிடம் டிடிவி தினகரன் வேண்டுகோள் வைத்தார்.  ஆனால் அதனை நிராகரித்து அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தார் .
இவற்றின் காரணமாக சசிகலாவுக்கும்டிடிவி தினகரனுக்கும் இடையே திரை மறைவு மோதல்கள் நடைபெற்று வருகின்றன .
இந்த நிலையில் , அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர் டிடிவி தினகரன். தற்போது , எட ப்பாடி பழனிச்சாமியுடன் கைகோர்த்து இருக்கிறார் . இதனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ள பல நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்கள் .
அவர்களோடு சேர்ந்து அதிமுகவிலிருந்தும் ஏராளமான நிர்வாகிகளை தன் பக்கம் சேர்க்கும் வகையில் சசிகலா தரைமறைவு திட்டம் தீட்டி வைத்திருக்கிறார் . எனவே வருகிற 24ஆம் தேதி சசிகலா புதிய கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுவதுடன் ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தொண்டர்களையும் அதிமுக தொண்டர்களையும் தனது கட்சியில் இணைக்கிறார் ,
இதற்கிடையே, ஓ பன்னீர்செல்வம் சசிகலாவுடன் தொடர்பில்தான் இருக்கிறார் . எனவே ஓ பன்னீர்செல்வம் சசிகலா அணியில் சேரலாம் என்றும் பேசப்படுகிறது . ஆனால் அதே சமயம் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து ஓ பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால் இருதலைக்கொள்ளி எரும்பாக ஓ பன்னீர்செல்வம்  தவித்து வருகிறார் .
சசிகலாவின் புதிய கட்சியை பொறுத்தவரையில் தங்களுக்கு எந்தெந்த தொகுதிகளில் சாதகமாக இருக்கிறதோ அந்தந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன . இது அல்லாமல் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து செயல்படுவதற்கும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது . முன்னதாக சசிகலாவின் வருகையை ஏற்றுக்கொள்ளாத தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தற்பொழுது சரியான கூட்டணி அமையாத காரணத்தினால் சசிகலாவை இணைத்துக் கொள்ளலாம் .
இதன் மூலம் முக்குலத்தோர் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என கருதுகிறார் . எனவே தமிழக வெற்றி கழகத்தில் சசிகலா இணைவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *