Pennalurpettai Murder: கூலி தொழிலாளி மரணத்தில் மனைவி பரபரப்பு வாக்குமூலம்!

Advertisements

ஊத்துக்கோட்டை அருகே பென்னாலூர்பேட்டை கூலி தொழிலாளிமர்ம மரணத்தில் திடீர் திருப்பமாக  மனைவி கள்ளக்காதலுனுடன் இணைந்து கணவனைக் கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த பென்னாலூர்பேட்டை கூலி தொழிலாளி சீனிவாசன் (43) கடந்த 4 ந் தேதி காட்டு பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்துஇருப்பதாகமருத்துவர்கள்கூறியதைதொடர்ந்து.

பென்னாலூர்பேட்டை போலீசார் சந்தேக மரணத்தைக் கொலை வழக்காக மாற்றி விசாரணைமேற்கொண்டதில் சீனிவாசன் மனைவி 29 வயதுடைய நந்தினிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த  26 வயதுடைய குமரன் என்ற இளைஞருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததைசீனிவாசன் கண்டித்ததால் கணவனை நந்தினி கள்ளக்காதலனுடன் இணைந்து  கழுத்து நெரித்துச் சீனிவாசனை கொலை செய்தது போலீஸ் விசாரணை அம்பலம் வெளியானது.

கணவனைக் கொன்ற நந்தினி கள்ளக்காதலன் குமரன் இருவரை  பென்னாலூர்பேட்டை போலீசார் கைது செய்தனர்.கூலி தொழிலாளிமர்ம மரணத்தில் திடீர் திருப்பமாக  மனைவி  கள்ளக்காதலுனுடன்இணைந்து கணவனைக் கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ள சம்பவம் ஊத்துக்கோட்டை அடுத்த பென்னாலூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *