Dad Kills Son: மகனைக் கொலை செய்த இரக்கமற்ற தந்தை!

Advertisements

தாம்பரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடன் தொல்லை காரணமாக மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்ய முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சைதன்யா (37), இவருடைய மனைவி வைதேகி (33) இவர்களுக்குப் பத்ரி (8), மற்றும் கவுசிக் (4) என இரண்டு மகன்கள் உள்ளனர்,

சைதன்யா கிழக்கு தாம்பரத்தில் உள்ள விமானபடையில் சமையல்காரராக வேலை பார்த்து மாடம்பாக்கம் பகுதியில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சைதன்யா தெரிந்தவர்களிடம் ஆன்லைன் சூது ஆட்டத்தில் ஈடுபடுவதற்காக லட்சம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியதால் கடன் தொல்லை அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது, இதனால் மருத்துவ விடுப்பு எடுத்து ஒரு வருடம் தனது சொந்த ஊருக்குக் குடும்பத்துடன் சென்ற சைதன்யா சிறிய அளவில் கடனை அடைத்தபின்பு மீண்டும் கடந்த 20ம் தேதி தனது குடும்பத்துடன் மாடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்துள்ளார்,

இந்நிலையில் இன்று அதிகாலை தனது மகன் பத்ரியை புடவையால் கழுத்தை இறுக்கி கொன்ற சைதன்யா தூக்கில் தொங்கவிட்ட பின்பு தானும் தற்கொலை செய்வதற்காகச் சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்றுள்ளார், முன்னதாகத் தனது வாட்ஸப் குழுவில் தனது மூத்த மகனைக் கொன்று விட்டதாகவும், தானுக் தற்கொலை செய்யப் போவதால் மனைவி மற்றும் இளைய மகனைப் பார்த்துக்கும் படி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்,

இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக வீட்டிற்க்கு சென்று பார்த்தபோது சைதன்யா மூத்த மகன் தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளார்,

இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துச் சைதன்யா செல்போனில் தொடர்பு கொண்டபோது மெரினா கடற்கரை போலீசார் சந்தேக அடிப்படையில் பிடித்து வைத்திருந்தது தெரிய வந்ததை அடுத்து சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்,

தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் விமானப்படை பயிற்சி மையத்தில் சமையல்காரர் ஆகப் பணியாற்றி வருகிறேன், மாதம் எனக்கு 42 ஆயிரம் பணம் சம்பளமாகக் கிடைக்கும் ஆனால் சூதாட்டத்திற்காகப் பயன்படுத்தப் பலரிடம் பல லட்சம் கடன் வாங்கி உள்ளதாகவும் மாதம் 50, ஆயிரம் என அவர்களுக்குக் கடன் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்,

இதனால் நான் தற்கொலை செய்யத் திட்டமிட்டு இருந்தேன் எனது மூத்த மகன் பத்ரி மிகவும் பிடித்தவன் என்பதால் அவனையும் தன்னுடன் அழைத்துச் செல்லத் திட்டமிட்டதும் நான் தற்கொலை செய்து கொண்டால் தனது வேலை மனைவிக்குக் கிடைக்கும் எனவும் அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் மாதம் 42 ஆயிரம் வைத்து எனது இளைய மகனைப் பார்த்துக் கொள்வார் இன்று திட்டமிட்டு முதலில் மகனைக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் என்பது தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது, இது சம்பந்தமாகச் சேலையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆன்லைன் சூதாட்டத்தினால்தந்தையே தனது எட்டு வயது மகனைக் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *