அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்.. அண்ணாமலை மீது பாய்ந்த வழக்கு..!

Advertisements

கோவை:

கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில் அனுமதியின்றி கூட்டத்தைக் கூட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதாகப் பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 1998 ஆம் ஆண்டுக் குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பாஷா கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து, பாஷாவின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஊர்வலத்துக்குப் பாஜக கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கருப்பு தின பேரணிக்கு நேற்று அழப்பு விடுக்கப்பட்டது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவை விகேகே மேனன் சாலையில் கருப்பு பேரணியில் ஈடுபட முயற்சித்தனர். அப்போது அண்ணாமலை பேசுகையில், 2022 ஆம் ஆண்டு மனித வெடி குண்டாக மாறிக் கோவையைத் தாக்கத் திட்டமிட்டனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் பிரபல துணிக்கடையில் காரை நிறுத்திச் சேதம் ஏற்படுத்த முயற்சித்தனர்.

1998 கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்தனர். 250 பேர் பலத்த காயமடைந்தனர். அந்தப் பாஷாவை அப்பா என்று சீமான் கூறுகிறார். உயிரிழந்த யாருக்கும் அப்பா இல்லையா. ஓட்டு பிச்சை எப்படி எடுக்க வேண்டும் என உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். திருமாவளவன் பாஷாவை, தியாகி… வீரவணக்கம் என்று கூறுகிறார்.

இதைவிட மோசமாக ஓட்டு பிச்சை யாராலும் எடுக்க முடியாது. இதே பாஷா 2003 ஆம் ஆண்டுக் கோவை நீதிமன்றத்தில் நரேந்திர மோடி கோவை வந்தால் கொன்றுவிடுவேன் என்று கூறியதை மறக்கக் கூடாது. பாஜக அமைதியை மட்டுமே விரும்புகிறது. இது மாற்றத்துக்கான சரியாந நேரம். அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருக்க சிறுபான்மை மக்கள் தங்களிடம் ஓட்டு கேட்க வருபவர்களை விரட்டியடிக்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாஜகவினர் மீது காவல்துறை ஒடுக்குமுறையை செலுத்துகின்றனர். இந்த வீரத்தை சத்தியமங்கலத்தில் சதி திட்டம் போட்ட தீவிரவாதிகள்மீது ஏன் காட்டவில்லை. கோவையில் இந்தமுறை வானதி அக்காவுடன் இணைந்து ஆறு எம்எல்ஏக்களையாவது சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என்று பேசினார்.

பேரணியில் ஈடுபட முயன்ற அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை காவல் துறையினர் கைது செய்து கணபதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்தனர். இந்நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் அனுமதியின்றி கூட்டத்தைக் கூட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதாகப் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலை மீது BNSS 170 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி உள்ளிட்ட 917 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *