G. Lakshmipathy: வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்!

Advertisements

நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பணிகள் தற்போது துவங்கி உள்ளது .அதன்படி தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இன்றைக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு இருந்த அறையின் சீலை அகற்றப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டது.

இந்தப் பணி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. அதன் பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி செய்தியாளரிடம் கூறுகையில்: பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் 1162 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று திறக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏழு இடங்களில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வாக்காளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வாக்காளர் எப்படி வாக்களிப்பது.

அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட உள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி கூறினார்.அப்போது  தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர் .

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *