
டைட்டான டீஷர்ட் அணிந்து விதவிதமான கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஷிவானியின் கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஸ்கூல் படிக்கும்போதே சீரியலில் நடிக்கத் தொடங்கிய ஷிவானி, ஆரம்பத்தில் குண்டாக இருந்ததால் இவருக்குச் சின்ன சின்ன ரோல்கள் மட்டுமே கிடைத்தன. இதையடுத்து தீவிரமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையைக் குறைத்த உடனே ஹீரோயினாகப் புரமோட் ஆனார் ஷிவானி.
பகல் நிலவு சீரியலில் அசீமுக்கு ஜோடியாக நடித்த இவர், பின்னர் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற தொடர்களிலும் நாயகியாக நடித்துப் பிரபலம் ஆனார். இதையடுத்து சினிமாவுக்குள் நுழைய ஆசைப்பட்ட ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பும் தேடி வந்தது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராகக் களமிறங்கிய ஷிவானி, அதில் சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் உடன் நெருங்கிப் பழகியது பேசுபொருள் ஆனது.

அவர்கள் இருவரும் காதலிப்பதாகக் கிசுகிசுக்களும் உலா வந்தன. இதனால் கடுப்பான ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று அவரை லெப்ட் ரைட் வாங்கியதை எல்லாம் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்ததும் ஷிவானிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அவர் முதன்முதலில் நடித்த படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார் ஷிவானி.

பின்னர் இவர் நடித்த டி.எஸ்.பி, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் ஆகிய படங்கள் தோல்வியடைந்ததால், தற்போது ஷிவானிக்கு பட வாய்ப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன.பட வாய்ப்புகளைப் பிடிக்கக் கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்துள்ள ஷிவானி, விதவிதமாகப் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

அந்த வகையில் தற்போது டைட்டான டீ ஷர்ட் அணிந்து இடுப்பு தெரிய கவர்ச்சியாகப் போஸ் கொடுத்து ஷிவானி பதிவிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன. ரசிகர்களும் இந்தப் புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.





