நாடாளுமன்றத்தில் அக்னிப் பரீட்சை..!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆம் கட்ட அமா்வு இன்று தொடங்கிறது.
தில்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆம் கட்ட அமா்வு இன்று முதல் தொடங்கி ஏப்ரல் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், முதல் நாளிலேயே மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா மீதான பதவி நீக்க தீர்மான விவாதம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து. இந்த தீர்மானம் மீது இன்றே வாக்கெடுப்பு நடைபெறும்.
இதையடுத்து, மேற்கு ஆசியா நிலவரம் குறித்தும், இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பல் தாக்கப்பட்டது குறித்தும், ரஷ்யா கச்சா எண்ணெய் விவாதத்தில் அமெரிக்காவின் மிரட்டல் குறித்தும் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சியினர் பிரச்சனையை கிளப்புவார்கள் என்று தகவல் வெளியாகிவுள்ளது. மேலும், இந்த விவகாரங்கள் குறித்து பாராளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்கும் என்று கருதப்படுகிறது. இதனால், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட அமர்விலும் கடும் அமளி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *