
சென்னை:
யுஜிசி புதிய விதிகள் அறிவிப்பை எதிர்த்துச் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதுதொடர்பாகப் பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
* முதலமைச்சரின் தனித்தீர்மானத்தை ஏற்க முடியாது எனக்கூறி வெளிநடப்பு செய்தோம்.
* ஆளுநருக்கு அதிக அதிகாரம் வேண்டும் எனக் கலைஞர் இதே அவையில் தீர்மானம் கொண்டு வந்தார் என்று கூறினார்.
முன்னதாக, ஆளுநருக்கு அதிக அதிகாரம் வேண்டும் எனக் கலைஞர் இதே அவையில் தீர்மானம் கொண்டு வந்ததாகப் பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கூறினார்.
அதற்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன்,
எந்தக் காலத்திலும் ஆளுநருக்குக் கூடுதல் பதவியென நாங்கள் கூறியிருக்க மாட்டோம், அப்படி இருந்தால் காட்டுங்கள்.
ஆளுநர் பதவியே கூடாது என்பது தான் எங்கள் கொள்கையெனச் சட்டசபையில் காட்டமாகப் பதில் அளித்தார்.



