உதயநிதி கேக்குற கேள்விக்கு பதில் எங்க விஜய்? – வறுத்தெடுத்த ஆ.ராசா.!

Advertisements

திருச்சியில் வீர வசனம் பேசிய முதலமைச்சர் ஜோசப்விஜய், சட்டமன்றத்தில் ஏன் அப்படி பேசவில்லை என்றும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்கும் எந்த கேள்விகளுக்கும் பதில் எதுவும் சொல்லவில்லை என்றும் சென்னையில் தி.மு.க. துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பில் ஆ.ராசா பேசும்போது, திருச்சியில் கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற விஜய், முதலமைச்சர் என்ற தகுதியை குறைத்துக்கொண்டு பேசியுள்ளார் என்றும். சட்டமன்றத்தில் விஜய் பேசியதையும், திருச்சியில் பேசியதையும் ஒப்பிட்டுப் பாருங்கள் என்றும் தெரிவித்த அவர், சட்டமன்றத்தில் தளர்வு, சோர்வு தயக்கம், இயலாமை இருந்தது என்றும், திருச்சியில் ஏன் இந்த வீர வசனம், அதை எழுதிக் கொடுத்தியவர் யார் என்றும் ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.

திருச்சியில் வீர வசனம் பேசிய விஜய், சட்டமன்றத்தில் ஏன் அப்படி பேசவில்லை என்றும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்கும் கேள்விகளுக்கு பதில் எதுவும் சொல்லவில்லை என்றும், தி.மு.க. உங்கள் மீது என்ன விமர்சனம் வைத்திருக்கிறோம் என்றும் ஆ.ராசா கேள்வி எழுப்பினார். மேலும், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்ட போது, முதலமைச்சர் அதை பற்றி ஏன் பேசவில்லை என்றும், மதம் பார்க்கமாட்டோம் என்றார்கள். ஆனால் முதலமைச்சர் கையில் ஒரு மதம், நெற்றியில் ஒரு மதம், பதவியேற்ற போது ஜோசப் விஜய் என்று ஒரு மதம் உள்ளது என்றும், தி.மு.க. துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *