
விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் கலைஞர் என்று நாடளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுனா கார்கே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பதிவிட்டுள்ளார். அதில், கலைஞரின் பிறந்தநாளில் அவருக்கு தனது மரியாதையான அஞ்சலிகள் என்று குறிப்பிட்டார்.
சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு சிந்தனை மற்றும் ஜனநாயக விழுமியங்கள் ஆகியவற்றிற்கான அவரது வாழ்நாள் அர்ப்பணிப்பு எண்ணற்ற வாழ்க்கையை மாற்றியது என்றும் தெரிவித்தார்.
பொது வாழ்வில் கலைஞர் கருணாநிதியின் மகத்தான பங்களிப்பு என்றென்றும் ஆழ்ந்த மரியாதையுடன் நினைவுகூரப்படும் என்றார்.நாடளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ‘கலைஞர்’ கருணாநிதி தமிழ் மக்களின் கண்ணியத்திற்காகவும், சமூக நீதிக்காகவும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடியதாகத் தெரிவித்தார்.
கலைஞர் முதலமைச்சர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த எழுத்தாளராகவும் சிந்தனையாளராகவும் இருந்தார் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு இந்தியரையும் சமமாக நடத்தும் ஒரு அரசியலமைப்பில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார் என்று கூறினார். அவரது பிறந்தநாளில் தனது பணிவான அஞ்சலிகள் என்று தெரிவித்தார்.



