Bengalore: மூன்று வந்தேபாரத் ரயில்களைத் தொடக்கி வைத்தார் மோடி!

Advertisements

பெங்களூரில் ஏழாயிரத்து 160 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, புதிய திட்டத்துக்கு;ம அடிக்கல் நாட்டியுள்ளார். மூன்று வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் கொடியசைத்துத் தொடக்கி வைத்துள்ளார்.

தில்லியில் இருந்து விமானத்தில் வந்த பிரதமர் நரேந்திர மோடியைப் பெங்களூர் விமான நிலையத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பாஜக தலைவர் எடியூரப்பா ஆகியோர் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.

பெங்களூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெங்களூர் – பெல்காம், அமிர்தசரஸ் – ஜம்முதாவி, நாக்பூர் – புனே ஆகிய நகரங்களுக்கிடையிலான மூன்று வந்தே பாரத் ரயில்களின் போக்குவரத்தையும்  பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். ரயிலில் பயணம் செய்த பள்ளிக் குழந்தைகளுடன் உரையாடி மகிழ்ந்தார்.

பெங்களூரில் ராகிகுட்டா முதல் பொம்மசந்திரா வரை 19 கிலோமீட்டர் தொலைவுக்குப் பணிமுடிக்கப்பட்ட மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்தையும் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

மெட்ரோ ரயிலில் பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார், மத்திய அமைச்சர்கள் மனோகர்லால் கட்டார், சோபா கரந்த்லஜே ஆகியோர் பயணித்தனர். உடன் சென்ற பள்ளி மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

15 ஆயிரத்து 610 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மெட்ரோ மூன்றாம் கட்டத் திட்டத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *