ஈரானின் புதிய உச்சத் தலைவராக காமேனியின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியதில் ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா காமேனி கடந்த மாதம் 28 ஆம் தேதி உயிர்மாய்க்கப்பட்டார். இதற்கு, ஈரான் பதிலடி கொடுக்கும் விதமாக கத்தார், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
மேலும், ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் ஒரு வார்த்தை கடந்துள்ளது. இதற்கிடையே, ஈரானில் புதிய உச்ச தலைவரை தேர்வு செய்வதற்காக மதகுருமார் கவுன்சில் ஆலோசனை நடைபெற்றது. இதில், ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



