திமுக, விசிக இடையே இருப்பது சகோதர முரண்பாடு – ஆ.ராசா கேள்வி..!

திமுக, விசிக இடையே இருப்பது சகோதர முரண்பாடு என்று நாடளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாடளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது அதிக பாசம் வைத்திருந்தாகவும் அதிகம் பாசம் வைத்திருந்தவர்கள் மீது தான் கோபம் வரும் என்றும் தெரிவித்தார். திமுக, விசிக இடையே இருப்பது சகோதர முரண்பாடு என்று குறிப்பிட்டார்.

திருச்சியில் முதல்வர் என்ற தகுதியைக் குறைத்து முதலமைச்சர் விஜய் பேசியுள்ளதாகத் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் செய்தியாளர்களை சந்திக்க மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

செய்தியாளர்களைச் சந்திப்பது முதலமைச்சரின் கடமை என்றார். முதலமைச்சர் நாற்காலியை விஜய் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் திருவள்ளுவருக்கு காவி உடை சர்ச்சை குறித்து முதலமைச்சர் விஜய் எதிர்க்க மறுப்பது ஏன் என வினவினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *