
பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிர்கொலை மட்டும் தான் ஓரே தீர்வு என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை அடுத்த ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேசுவரர் ஆலயத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, கட்சி நிர்வாகிகளுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர் விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி என சொல்லி குறைந்த பேருக்கு மட்டுமே தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளதை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளோம் என்று கூறினார்.
கும்பேகோணத்தில் காவலர் கையை முறித்து வன்முறை சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் மூடவேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிர்கொலை மட்டும் தான் இதற்கு தீர்வு என்று தெரிவித்துள்ளார்.



