Advertisements

பாக். சிந்து மாகாணத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக போராட்டகாரர்கள் சிந்து உள்துறை அமைச்சர் வீட்டை தீ வைத்து எரித்தனர்.
பகல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சிந்து நதியில் புதிய கால்வாய்கள் கட்ட மாகாண அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மோரோ, மதியாரி மற்றும் நவ்ஷேரா பெரோஸ் மாவட்டத்தில் சிந்தி சபா தேசியவாத கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் 6 போலீசார் காயமடைந்தனர். இதனால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. போராட்டகாரர்கள் பல்வேறு இடங்களில் சாலைகளில் உள்ள வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து சிந்து உள்துறை அமைச்சர் ஜியாவுல் ஹசன் லஞ்சாரின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு தீ வைத்து எரித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.