
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசார பயணத்தை தொடங்கியுள்ளார்.
திருச்சி மாவட்டம், மரக்கடையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்க உள்ளார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திருச்சிக்கு வந்தடைந்தார். இந்நிலையில், விஜயை காண விமான நிலையத்தில் அதிகாலை முதல் ஏராளமான நிர்வாகிகள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில் தடுப்புகளை தாண்டி விமான நிலைய வளாகத்துக்குள் தொண்டர்கள் நுழைந்தனர். இதனையடுத்து, த.வெ.க தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், விஜய், பிரசார பஸ்ஸில் ஏறி புறப்பட்டதும் நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரை பின் தொடர்ந்தனர். பிரசார வாகனம் செல்ல முடியாத வகையில் கூட்ட நெரிசல் சூழ்ந்துள்ளதால் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் விஜய் பேசுவதில் சிக்கல் எழுந்துள்ளது. காலை பத்து மணி முதல் பதினொறு மணி வரை பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் அனுமதியளித்த நிலையில் கூட்ட நெரிசல் காரணமாகத் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.



