Advertisements

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது
சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16ஆம் தேதி முதல் 2 நாட்களுக்கு சோதனை நடத்தினர். இதில் டாஸ்மாக் மேலான் இயக்குநர் விசாசன் ஐஏஎஸ், எஸ்என்ஜே மதுபான நிறுவன அலுவலகம், சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் தேவக்குமார், தொழிலதிபர் ரத்தீஷ் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து டாஸ்மாக் நிறுவன மேலாளர் சங்கீதா மற்றும் துணை மேலாளர் ஜோதி சங்கர் ஆகியோர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினர். அவர்கள் இருவரிடமும் தனித்தனியாக சுமார் 6 மணி நேரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தடை விதித்துள்ளார். அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் கடும் கண்டனம் தெரிவித்தார். இவ்வழக்கின் விசாரணை ஜீலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Advertisements



