அரபிக் கடலில் புதிய துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்.!

கனிம வள பொருளாதாரத்தை மேம்படுத்த அரபிக் கடலில் புதிய துறைமுகத்தை அமைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசீம் முனிர் ஆகியோர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கனிம மாதிரிகளை அதிபர் டிரம்பிடம் காண்பித்தனர். பின்னர், அரபிக் கடலில் புதிய துறைமுகத்தை அமைக்க பாகிஸ்தான் அமெரிக்காவின் உதவியை நாடியது.

தொடர்ந்து பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கனிம வளங்களை பூமியில் இருந்து வெட்டி எடுத்து தனது பொருளாதாரத்தை மேம்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

மேலும், அமெரிக்க முதலீட்டாளர்கள் இத்துறைமுகத்தைக் கட்டவும் இயக்கவும் பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *