
காசா மீதான கட்டுப்பாட்டை விட மறுத்தால் ஹமாஸ் அழிவை சந்திக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியிருந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்தார்.ஆனால் காசாவில் மீண்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் பட்டினியால் ஒருவர் உயிரிழந்தார்.இப்போதைக்கு காசாவில் முழுமையான போர் நிறுத்தம் எதுவும் நடைமுறையில் இல்லை என்று இஸ்ரேல் அரசாங்கத்தின் ஊடக தரப்பிலிருந்து தகவல் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில்,காசாவின் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் கைவிட மறுத்தால் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே இஸ்ரேலிய பேச்சுவார்த்தை குழு , கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக பாலஸ்தீன குழுவான ஹமாஸுடன், எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.



