
2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனையில் இடம் பிடித்துள்ளது. ஆனால் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், 5 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைச் சந்தித்து தவெக கூட்டணியில் இணைந்தது.
இதில் காங்கிரஸ் தரப்பில் சில நிபந்தந்தனை விதித்துள்ளனர். அதாவது, காங்கிரஸிற்கு 3 இலாகாக்களுடன் 2 அமைச்சர் பதவிகள் வழங்க வேண்டும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் 8 மேயர் இடங்கள் காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட வேண்டும் என அறிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் திமுக உடனான கூட்டணி என்பது தேர்தலுக்கானது மட்டுமே, தற்போது தேர்தல் முடிந்துவிட்டது என மாணிக்கம் தாகூர் பேட்டியளித்துள்ளார்.
இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த திமுக – காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.



