தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜெம் வீரமணி தொடர்பான வழக்கு விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது.இச்சம்பவத்தோடு தொடர்புடைய முக்கிய நபர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் தொடர்புடைய சாந்தி, மகேந்திர சிம்மன், கணேசன் ஆகிய மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்..
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கடுமையான சட்டப்பிரிவுகள் (POCSO) இவர்க மீது பாய்ந்துள்ளதால், இவ்வழக்கு காவல்துறையினரால் மிகவும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சாந்தி, மகேந்திர சிம்மன், கணேசன் ஆகிய மூன்று பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
தங்களுக்கு ஜாமீன் வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்பு தீவிரமாக நடைபெற்று வந்தது. ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் இருந்து மிக வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. “வழக்கின் விசாரணை தற்போதுதான் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்தச் சூழலில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், அது சாட்சிகளைக் கலைக்க வழிவகுத்துவிடும்,” என்று காவல்துறை தரப்பில் திட்டவட்டமாக வாதிடப்பட்டது.
மேலும், இவ்வழக்கின் தீவிரத்தன்மையையும், பாதிக்கப்பட்ட தரப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டி ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கடுமையாக வலியுறுத்தினார். காவல்துறை தரப்பு வாதங்களையும், வழக்கின் தற்போதைய சூழலையும் முழுமையாக ஆய்வு செய்த சென்னை போக்சோ நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுவை ஏற்கும் வகையில் இல்லை என்று தீர்ப்பளித்தது..
விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால் இந்தச் சமயத்தில் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, சாந்தி, மகேந்திர சிம்மன், கணேசன் ஆகிய மூன்று பேரின் ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.



