Theni : ராகுல் காந்தியை கைது செய்வதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.!

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (CJP) மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதைக் கண்டித்து, பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்திய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்..
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தேனியில் காங்கிரஸ் கட்சி சார்பாக பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினார்கள்..
மேலும் ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் கையில் ஏந்தி கைகளில் கருப்பு கொடியை கட்டி மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *