Parandur: போலீசார் உடன் கடும் தள்ளுமுள்ளு வாக்குவாதம்!

Advertisements

பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலம் எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைதுசெய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கிச் சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 580 நாட்களாக ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விமான நிலையம் அமைப்பதற்கான நிலங்களைக் கையகப்படுத்தும் பணியில் தமிழக தொழில் துறை ஈடுபட்டு அதற்கான அறிவிப்பினை நாளிதழ்களில் வெளியிட்டு உள்ளது.

நிலம் கையகப்படுத்தும் பணிகளில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் ஏப்ரல் நான்காம் தேதிக்குள் நில எடுப்பு அலுவலகத்தில் தெரிவிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.நிலம் எடுப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அறிந்து கிராம மக்கள் பெரும் அச்சமடைய தொடங்கி உள்ளனர்.

நில எடுப்பு அறிவிப்பு எதிரொலியாக நிலவெடுப்பு அலுவலகத்தில் தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள் தங்கள் கிராமத்திலிருந்து டிராக்டர்களின் ஏறிச் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

கிராம மக்களின் முற்றுகை போராட்டம் நடைபெறுவதை ஓட்டிக் காஞ்சிபுரம் சரக டிஐஜி பொன்னி உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சண்முகம் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் ஏகனாபுரம் கிராமத்தில் குவிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்துபோராட்டத்தில்ஈடுபடடிராக்டரில்ஏறியகிராமமக்களையும்போராட்டக்காரர்களையும் போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்ய முற்பட்டனர். இதன் காரணமாகக் கிராம மக்களும் போராட்டக் குழுவினரும் போலீசார் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கூறி
போராட்டத்தில் ஈடுபட வந்த மூதாட்டி ஒருவர் திடீரென மண்ணெண்ணையை தீக்குளிக்க மயானத்தை தொடர்ந்து போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தினார்கள்.இதன் காரணமாக ஏகானாபுரம் கிராமத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி சண்முகம் தலைமையிலான போலீசார் வலுக்கட்டாயமாக 100க்கும் மேற்பட்ட கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் மூன்று பேருந்துகளில் கைது செய்து அழைத்துச் சென்று சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.இந்தச் சம்பவம்  காரணமாக ஏகானாபுரம் கிராமத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *