OPS -யை சரமாரியாக தாக்கி பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு – எதற்கு தெரியுமா..?

சாதாரண டீக்கடைக்காரராக இருந்த ஓபிஎஸ்-ஐ 3 முறை முதலமைச்சராக்கி அழகுபார்த்த அதிமுக கட்சியைப் பார்த்து அழிந்து விடும் என்று பேசுவதா? என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தேர்தல் பிரச்சார குழு ஆலோசனைக் கூட்டம் முன்னாள் நாடாளுமன்ற அமைச்சர் தம்பிதுரை தலைமையில் நடந்தது. இதில் தேர்தல் பிரச்சாரத்தில் கொடுக்கப்படக்கூடிய வாக்குறுதிகள் குறித்தும், பிரச்சாரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த செல்லூர் ராஜு, சாதாரண டீக்கடைக்காரராக இருந்த ஓபிஎஸ்-ஐ 3 முறை முதலமைச்சராக்கி, அமைச்சராக்கி பல்வேறு பொறுப்புகளை கொடுத்து அழகு பார்த்த அதிமுக கட்சி அழிந்து விடும் என்று ஓபிஸ் பேசலாமா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *