ஈரானில் இருந்து அமெரிக்கா வெளியேறும் – டிரம்ப் .!

இரண்டு மூன்று வாரங்களில் ஈரானில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவர இது அடிப்படையானது என்று ஈரானும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் தொடுத்ததையடுத்து மேற்காசியாவில் போர்ச்சூழல் நிலவுகிறது.

ஒருமாதமாக நீடிக்கும் போர் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  போருக்கு முன் ஒரு 70 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் இப்போது 120 டாலராக உயர்ந்துள்ளது. அதேபோல் ஹார்மஸ் நீரிணை வழியாக எண்ணெய், எரிவாயுக் கப்பல்கள் போக்குவரத்து தடைபட்டதால் உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதன் எதிரொலியாக உணவு, மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் ஈரானில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வரும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஈரான் அதிபர் மசூது பெசஸ்கியான், போரை முடிவுக்குக் கொண்டு வர இது அடிப்படையானது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *