
பத்ம விருது பெறுபவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவில், இந்த ஆண்டுக்கான பத்ம விபூசண், பத்ம பூசண், பத்மஸ்ரீ விருதுகள் பெறுவோரின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தப், பட்டியலில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, மகளிர் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், நடிகர் மாதவன் உள்ளிட்ட 131 பேர் தேர்வாகியுள்ளனர்.
இந்நிலையில், பத்ம விருது பெறுபவர்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், நாட்டுக்கு ஆற்றியப் பங்களிப்புக்காகப் பத்ம விருது பெறும் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகள். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தங்களது பண்பு, அர்ப்பணிப்பு, சேவை ஆகியவை நமது சமூகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துகின்றன.
இந்த கவுரவம் வரும் தலைமுறையினரைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றும், மேன்மையின் உணர்வைப் பிரதிபலிக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்.




