
நம் உடல் ஆரோக்கியத்திற்குத் தினசரி தேவைப்படும் பல சத்துக்கள் இந்தப் பூசணி விதைகளில் அடங்கியுள்ளது.
பூசணி விதைகளில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவற்றைச் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
இதில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு, புரதம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது.
பூசணி விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், மெக்னீசியம், ஃபேட்டி ஆசிட்டுகள் இதயத் துடிப்பிற்கு நல்லது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மேலும் இது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
பூசணி விதைகளில் ட்ரைப்டோபான் என்ற அமினோ ஆசிட் உள்ளது இது தூக்கத்தை மேம்படுத்துகிறது. பூசணி விதைகளில் புரதம் அதிகம் உள்ளது, இது தசைகள் பழுதுபார்ப்பதற்கு உதவுகிறது.
மேலும் இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பூசணி விதைகளைப் பச்சையாகவோ, காய வைத்துப் பொடியாக்கியோ, வெண்ணெய்யில் வறுத்தோ சாப்பிடலாம்.
பூசணி விதைகளைச் சாலட், ஸ்மூத்தி, வெந்நீர் போன்றவற்றில் சேர்த்து குடிக்கலாம்.
பூசணி விதைகளில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதத்தின் நல்ல மூலமாகும். மெக்னீசியம், துத்தநாகம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஈப் போன்ற ஊட்டச்சத்துக்கள் இந்த விதைகளில் காணப்படுகின்றன.
