ஈரான் பாதுகாப்பு தலைவர் லாரிஜானி இறந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு..!

Advertisements

ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு தலைவரான லாரிஜானி உயிரிழந்தார் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரான் பாதுகாப்பு தலைவரான லாரிஜானியும், புரட்சிகர காவல் படையின் பசிஜ் தன்னார்வ குழுவின் தலைவர் ரெசா சுலைமானியும் உயிர் மாய்க்கம் செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரான் அரசு உறுதிப்பட தகவல் தெரிவிக்கவில்லை.

இதில், அயதுல்லா கமேனி உயிர்மாய்க்கம் செய்யப்பட்ட பிறகு ஈரானில் கிட்டத்தட்ட 2ம் கட்ட தலைவராக லாரிஜானி செயல்பட்டு வந்தார். இடைக்கால கவுன்சிலுடன் இணைந்து போரை வழிநடத்தினார். அவரது இழப்பு  ஈரானுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டம் எனக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, ஈரானின் மூத்த அதிகாரி  வெளியிட்ட அறிக்கையில், ‘‘போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மறுத்துள்ளார் என்று கூறினார். அமெரிக்காவும் இஸ்ரேலும் தோல்வியை ஏற்றுக் கொண்டு இழப்பீடுகளை செலுத்தும் வரை அமைதிக்கான சரியான நேரம் இதுவல்ல எனக் கூறியுள்ளதாகத் தெரிவித்தார்….

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *