தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அவர்களுடைய கட்சி பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.. அந்த வகையில் திமுக அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்..இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நீண்ட நாட்களாகவே இழுபறியாக நீடித்து வந்த நிலையில், இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது பற்றிய பின்னணி தகவல்களை தற்போது விரிவாக பார்க்கலாம்..
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு மிகவும் விறுவிறுவென நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகள் அனைத்திற்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், கடந்த தேர்தலை விட இந்த முறை கூட்டணி கட்சிகள் தங்களது கோரிக்கைகளை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் திமுக தலைமை கூட்டணி கட்சிகளிடம், “இந்த முறை புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் கடந்த தேர்தலை விட சில தொகுதிகளை குறைத்து ஏற்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இந்நிலையில் ,தற்போது வரை காங்கிரஸ் கட்சிக்கு 28, ஐயுஎம்எல் கட்சிக்கு 2, மதிமுக -வுக்கு 4, மமக – க்கு 2, கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 2 என தொகுதி பங்கீடு இதுவரை கையெழுத்தாகியுள்ளது…
இந்நிலையில் கம்யூனிஸ்ட்கள், விசிக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக சென்று கொண்டிருந்தது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடன் திமுக தொகுதி பங்கீட்டை சற்றுமுன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட்டனர். இந்நிலையில் , கடந்த இரண்டு தேர்தல்களாக திமுக கூட்டணியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கோரின.
இதனால் பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டே வந்தது இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இன்று தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்திருக்கிறது. அதன்படி, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சிபிஐ 6 தொகுதிகள் ஒதுக்க பட்ட நிலையில் , இந்த சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுகக்கியது திமுக தலைமை.. கடந்த 2021 தேர்தலில் இரண்டு தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் ,, தற்போது தொகுதிகளை குறைத்து ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்…
இந்நிலையில் , இது குறித்து சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அண்ணா அறிவாலயத்தில் , செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இது சாதாரணமாக வந்து போகிற தேர்தல் அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். பாஜக ஒரு பதற்ற அரசியலை சுமந்து வருகிறது. அமைதியான தமிழ் மண்ணை சீர்குலைக்க முயற்சிக்கிறது. அதனால் இம்முறை சிபிஐ கட்சியின் முதன்மை இலக்கு பாஜகவை வீழ்த்துவது தான். திமுகவுடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். கடந்த முறையை விடவும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரினோம்.
இறுதியாக முதல்வர் ஸ்டாலின், கூட்டணியில் கூடுதலாக பன்னீர் செல்வம் , தேமுதிக போன்ற கட்சிகள் புதிதாக இணைந்திருப்பதால் தொகுதி பங்கீட்டில் கொஞ்சம் சிக்கல் உள்ளது.. எனவே நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனால் 6 தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால் நிறைவாக 5 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 5 இடங்கள் என்பது கட்சி நிர்வாகிகளை சோர்வடைய செய்யலாம். ஆனால் இதனை கடந்து எங்களுக்கு ஒரு அரசியல் இருக்கிறது.
பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. அதற்காகவே அணி சேர்ந்திருக்கிறோம்.. திமுக ஒவ்வொரு முறையும் கட்டளையிடுகிற வகையில் பேசவில்லை. சிபிஐ கட்சியை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் கூடுதலாக போட்டியிட வேண்டும் என்று நினைத்தோம். ஒவ்வொரு முறையும் வேண்டுகோள் தான் வைத்தனர் என்று தெரிவித்துள்ளார்…
இந்நிலையில் , காங்கிரஸ், ஐயுஎம்எல் , மதிமுக , மமக , கொங்கு மக்கள் தேசிய கட்சி, தற்பொழுது கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..