Advertisements

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை விட வருகிற சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும் அமைச்சரவையில் பதவி தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டு இருக்கிறது .
இந்த நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து பேசினார் . அப்பொழுது கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது . ஆனால் அப்பொழுது கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை என்றும் கனிமொழியிடம் ராகுல் காந்தி புதுவிதமான கோரிக்கை வைத்திருக்கிறார் என்றும் தற்போது தகவல் வெளியே தெரிய வந்திருக்கிறது .
டெல்லியில் , அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து கனிமொழி என்னென்ன பேசினார் ? ராகுல் காந்தி என்னென்ன கோரிக்கை வைத்தார் ? என்பது குறித்த ஜெம் தொலைக்காட்சியின் செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம் ..!!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு நான்கு சதவீத வாக்கு வங்கிகள் இருக்கிறது. அந்த வகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் சேர்ந்து 25 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது . இதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது .
இந்த நிலையில், வருகிற சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் மூன்று அமைச்சரவை பதவிகள் தர வேண்டும் என காங்கிரஸ் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன . ஆனால் திமுக தரப்பில் காங்கிரஸ் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதன் ஒரு பக்கமாக காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் திரை மறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்பட்டது .
இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட்டணி பற்றி இறுதி முடிவு எடுக்கும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லி சென்றார் அங்கு சோனியா காந்தி இல்லத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார் . அப்பொழுது திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்து இருவரும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள் .
அப்பொழுது ராகுல் காந்தி தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி மிக பலமாகவே இருக்கிறது . வருகிற சட்டமன்ற தேர்தலில் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் என காங்கிரஸ் கட்சி கேட்பது நியாயமான செயல்தான் எனவே 41 சட்டசபை தொகுதிகளை ஒதுக்கி தாருங்கள் . மேலும் இரண்டு ராஜ்யசபா பதவிகளும் தரப்பட வேண்டும் . அமைச்சரவையில் ஒரு இடமாவது ஏற்படுத்தி தர வேண்டும் மேலும் உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீத இடங்கள் ஒதுக்கி தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறார் .
இதற்குப் பதிலளித்த கனிமொழி கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கி தரப்பட்டன . தற்பொழுது கூடுதல் தொகுதிகளை ஒதுக்கி தந்தால் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகளை அதிகப்படுத்தி தர வேண்டிய சூழ்நிலை ஏற்படும் . எனவே திமுகவை பொருத்தவரையில் நாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் .
எனவே மிக இக்கட்டான சூழ்நிலை இருக்கிறது. ஆகவே அதிகபட்சமாக 27 தொகுதிகளை ஒதுக்கி தரும் வகையில் நான் பேச்சுவார்த்தை நடத்துகிறேன். 41 சட்டசபை தொகுதிகள் என்பது நிச்சயமாக முடியாது. அதே போல் ராஜ்யசபா சீட் மற்றும் உள்ளாட்சி தேர்தல் என்பதெல்லாம் நான் செய்ய வேண்டிய முடிவுகள் அல்ல . அது தலைவர் ஸ்டாலின் செய்ய வேண்டிய முடிவு ஆனால் அதே சமயத்தில் தலைவர் ஸ்டாலின் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என எனக்கு நன்றாக தெரியும்.
எனவே நீங்கள் தான் கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டும் என பேசி இருக்கிறார் . இதன்மூலம் திமுக காங்கிரஸ் இடையிலான கூட்டணி முடிவுகள் இன்னும் ஏற்படவில்லை என்றே தெரிகிறது .
Advertisements


